Monday, July 30, 2012

ஆன்லைனில் டைகிராம் இலவசமாக வரையலாம் !!

இணையத்தில்  டைகிராம் வரைய உதவும் ஆன்லைன் கருவி முற்றிலும்  இலவசமாக பயன்படுத்தலாம் . எளிதாக டைகிராம் வரைய முடியும் . சாதாரண டைகிராமில் இருந்து மேம்ப்பட்ட டைகிராம் வரை இந்த தளத்தில் வரைய முடியும் . இது மென்பொருளாக இல்லாமல் ஆன்லைனிலேயே பயன்படுத்த கூடிய வகையில் உள்ளது .

இந்த தளத்தில் நம் விருப்பப்படி டைகிராமை உருவாக்கி பதிவிறக்கி கணினியில் சேமித்து கொள்ள முடியும் .

எப்படி பயன்படுத்துவது டைகிராம் கருவியை :



முதலில் இந்த தளத்துக்கு சென்று தேவையான வடிவத்தை தேர்வு செய்து




Zoom செய்து பார்த்து வரையும் வசதி இதில் உள்ளது  .

 சாதாரணமாக சேமித்தால் Xml வடிவில் சேமிக்கும் . வேறு Format -களில் சேமிக்க வேண்டுமானால் Save as என்பதை கிளிக் செய்து எந்த Format-ல் வேண்டுமோ அதில் சேமிக்கலாம் .

பாதி  வரைந்த டைகிராமை கணிணியல் பதிவிறக்கி விட்டு மீண்டும் திருத்த (Edit) வேண்டுமானால் File -Import File என்பதை கிளிக் செய்து அதை Edit செய்யலாம் .

பின்வரும்  File Format-களில் உள்ள டைகிராம்-களை திருத்த முடியும் . PNG, GIF, JPG, PDF, and SVG.

மொத்தத்தில்அனைவரும் பயன்படுத்த எளிதாகவும் இலவசமாக கிடைப்பதால் சிறந்த ஆன்லைன் டூல்-ஆக இருக்கிறது .


பயன்கள்  :

இணையதளம் நன்றாக பயன்படுத்த எளிதாக வடிவமைக்கப் பட்டுள்ளது

பதிவு செய்ய தேவை இல்லை

பல வடிவங்களில் டைகிராம் வரைய முடியும் .

ஒன்றுக்கும் மேற்பட்ட File Format-களை ஆதரிக்கிறது .

Via @ : http://www.diagram.ly/

7 comments:

  1. அறியாத தளம்...
    விரிவான விளக்கம்
    நன்றி.

    ReplyDelete
  2. மிகவும் பிரயோசனமான தகவல் நண்பா
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. நல்ல தகவல் நண்பரே!

    ReplyDelete
  4. பலருக்கும் இந்த தளம் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்

    ReplyDelete
  5. எல்லோருக்கும் ஒரு பயனுள்ள இடுகை . நன்றி

    ReplyDelete
  6. அருமையான பதிவு நன்றி

    ReplyDelete
  7. பயன்படுத்தி பார்த்தேன்.பயனுள்ள பதிவு.தொடருங்கள்

    ReplyDelete