Thursday, May 7, 2015

எந்த மென்பொருளில் எவ்வளவு இணைய அளவு (Internet Data usage)எடுத்துக் கொண்டது என்பதை அறிய


தினமும் பல வேலைகளுக்கு இணையத்தை சார்ந்தே இருக்க வேண்டி உள்ளது . இணையத்தை பயன்படுத்துவோரும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகின்றன . தினமும் அதிக அளவு இணையத்தை பயன்படுத்தினால் அதன் பில் எகிறி விடும் .அதன் அளவை அறிந்து செயல் பட்டால் பணமும் மிச்சம் .

Monday, May 4, 2015

பேஸ் புக் Messenger - ஐ Facebook Messenger (for Web) இனி இணையத்தில் பயன்படுத்தலாம்
கடந்த சில வருடங்களாக சமுக வலைதளங்களின் வளர்ச்சி அதிகமாக காணப் படுகிறது .ஸ்மார்ட் போன்களின் வருகையும் 3g,4g போன்ற வற்றின் வருகையையும் இதற்கு ஒரு காரணம் . மேலும் ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு குறைந்த விலையில் மிக அதிக வசதிகளை கொண்ட ஐ போன் க்கு நிகரான கைபேசிகளை தயாரித்து வெளிட்டு வருகின்றன . இதனால் பேஸ் பூக்கில் தங்கள் நண்பர்களோடு 24/7 மணி நேரமும் இணைப்பிலேயே இருக்கின்றன.

பேஸ் பூக்கில் 1.35 பில்லியன் மக்கள் இருக்கின்றன . தினமும் 100 கோடி பேர் அக்டிவ் பயனர்களாக இருந்து வருகின்றன. பேஸ் புக் பயன்படுத்துபவர்கள் அனைவரும் மேசஞ்சர்(தூதுவர்) என்ற ஸ்மார்ட் போன் App தங்கள் கைபேசியில் வைத்துள்ளனர் .

இந்த மெசஞ்சர் வசதியை இனி இணையத்திலும் பயன்படுத்தலாம்.

0.https://www.messenger.com/  என்ற இணைப்புக்கு சென்று பேஸ் புக் பயனர் பெயருடன் கடவு சொல்லையும் உள்ளிட்டு சென்றால் எதிர் வரும் பக்கத்தில் உங்கள் மெசஞ்சர் பக்கம் வந்து விடும் .

1.நண்பர்கள் லிஸ்ட் .

2.செய்தி அனுப்புதல் .

3.வாய்ஸ் கால் , வீடியோ கால் செய்ய முடியும்.

Saturday, May 2, 2015

பிளாக்கரில் பதிவின் தலைப்பும் விளக்கமும்(Description) எப்படி இருக்க வேண்டும்
பிளாக்கரில் பதிவின் தலைப்பும் அதன் விளக்கமும் இணைந்த ஒரு பகுதி . இது கூகுள் தேடலின் கண்கள் இங்கே தான் இருக்கும் . பொதுவாக தேடுபொறிகள் இதை தான் அதிகமாக  எடுத்து கொள்ளும் .

Thursday, April 30, 2015

பல வகையான மொபைல் டேப்ளட்களில் உங்கள் தளம் எப்படி இருக்கும்


நாளுக்குநாள் புதிய மொபைல்களும் டேப்களும் புதிய தொழில் நுட்பதை தாங்கி வருகிறது . மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புதிய வகையான கருவிகளை வெளியிடுகின்றன .அதற்கு ஏற்ப இணைய வடிவமைப்பாளர்களும் கருத்தில் கொண்டு இணையதளங்களை அந்த கருவிகளுக்கு ஏற்ப வடிவமைக்கின்றனர் .

அதன் அடிப்படையில் நமது ப்ளாக் , இணையத்தளம் , போன்றவை எப்படி அந்த Device-களில் தெரிகின்றன .என்பதை எப்படி அறிவது என்பதை விளக்கு கிறது இந்த பதிவு . எல்லா வகையான மொபைல் களும் நம்மிடம் இருக்காது .அதனை சோதனை செய்வதற்கு எந்த ஒரு மென்பொருளும் தேவை இல்லை .

1.நாம் பயன்படுத்தும் குரோம் உலாவி ஒன்றே போதும் .நீங்கள் இயங்கி கொண்டிருக்கும் க்ரோமில் Right Click -செய்து Inspect Element என்பதை தேர்ந்தெடுங்கள் அதில் ஒரு மொபைல் போன்று ஒரு ஐகான் இருக்கும் அதை கிளிக் செய்து தோற்றத்தை பெற முடியும் .

 
2.அதன் பிறகு வரும் விண்டோவில் Device-ஐ தெரிவு செய்யவும் . 


3.கீழே உள்ள படத்தில் உள்ளதை Uncheck செய்து விட்டால் தெளிவான தோற்றத்தை காட்டும் .Monday, April 27, 2015

MS Office (2007-2010-2013) User Interface in Tamil - எம்.எஸ்.ஆபீஸ் தமிழ் இடைமுகம்


பள்ளிகள் கல்லுரிகள் இணையதளங்கள் என அதிகம் எழுத்து மற்றும் படங்களை கொண்ட கோப்புகளை உருவாக்குவதில் அதிகம் மைக்ரோ சாப்டின் எம்.எஸ் தொகுப்பு பயன்படுகிறது . அதில் உள்ள ms Office,ms Power point, ms One note Ms Publisher போன்ற அனைத்து தொகுப்புகளும் அதிக அளவில் பயன்படுத்த பட்டு வருகின்றன . திறந்த மூல மென்பொருள்களான Open office ,Libre Office போன்றவை  இருந்தாலும் இதில் உள்ள பல்வேறு கூடுதல் சிறப்பு அம்சங்களால் இந்த மென் பொருள தொகுப்பு அனைவராலும் பயன்படுத்தப் பட்டு வருகின்றது .

Friday, April 24, 2015

இணையதளங்களின் பழைய தோற்றங்களை(வருடங்களை ) காண -இணைய ஆவணகம்வரலாற்றை திரும்பி பார்ப்பது என்பது மிகவும் சுவாரசியமான ஒன்று . கடந்த பத்து வருடங்களில் நாம் எப்படி இருந்தோம் .ஒவ்வொரு வருடமும் நம்முடைய வளர்ச்சி எப்படி இருந்தது .இப்படி பழைய நினைவுகளை திரும்பி பார்ப்பது நம் வாழ்கையில் இருந்து கற்று  கொள்ள உதவும் .அப்படி கடந்த 15 - வருடங்களில் ஒட்டு மொத்த இணையமும் எப்படி இருந்தது என்பதை பார்ப்பது அருமையான விஷயம் .