வணக்கம் நண்பர்களே நாம் தினமும் பயன்படுத்தும் தொழில்நுட்ப உலகில் நாளுக்குநாள் பலபல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது .. அனுதினமும் கணிணிக்கு முன் உட்காரும் நாம் பல தரப்பட்ட கோப்புகளை திறந்து பார்க்கிறோம் . பயன்படுத்துகிறோம் , மற்றவர்களோடு பகிர்கிறோம் ..போன்ற பல வேலைகளை செய்கிறோம் ....
ஆரம்ப காலகட்டங்களில் சில வகையான Format இருந்தன காரணம் அன்றுள்ள மென்பொருள்கள் மிகக்குறைவு ..
மென்பொருள்கள் உருவாக்கும் போது அந்த மென்பொருளில் திறக்கும் கோப்புகளை தான் Format-களாக பிரித்து வைப்போம் ..
காலம் ஆக ஆக மென்பொருள் உருவாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது .. இன்றைய அளவில் தினமும் பல மென்பொருள்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது ..அதற்கான Format-களையும் அதோடு வெளியிடுகிறார்கள் . உதாரணமாக MP3 format கோப்புகளை ஏதாவது ஒரு Player மென்பொருளில் திறப்போம் .. தொழில்நுட்ப உலகில் உள்ள அனைத்து வகையான Format-களையும் அறிந்து கொள்ள உதவுகிறது .. A-Z மற்றும் Symbol போன்ற வகைகளில் Format(Exe)-களை பிரித்து வைத்துள்ளது இந்த தளம் ..
சில நேரங்களில் உங்களுக்கு நண்பர்கள் ஏதாவது ஒரு Exe கோப்பை அனுப்பி வைப்பார்கள் . அது என்ன வகை Format என்று தெரியாமல் குழம்பி கொண்டு இருப்பீர்கள் . அந்த நேரங்களில் உங்களுக்கு இந்த தளம் மிகவும் பயனுள்ள விதமாக இருக்கும் .. மென்பொருள் உருவாக்கத்தில் இருப்பவர்களுக்கும் இந்த தளம் பயன்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
தேவையான File Type -பக்கத்துக்கு சென்றவுடன் " technical data "
என்பதின் கீழ் Click This Link " என்பதை அழுத்தியவுடன் எந்த மென்பொருளில் அக்கோப்பை திறக்கலாம் என்பதையும் கூடுதலாக பல தகவல்களையும் இந்த தளம் தருகிறது .
கணிணி யில் தினமும் பல வகை கோப்புகளை பயன்படுத்தும் நாம் அந்த கோப்புகளின் File Type -யும் எந்த மென் பொருளில் அந்த கோப்புகளை திறக்கலாம் என்று தெரிந்து கொண்டால் கணிணியை வேகமாக் நம்மால் இயக்க முடியும் .
இணையதள முகவரி http://filext.com/
நன்றி ..
Useful tips tnx nanbaa
ReplyDeleteஉபயோகமான பகிர்வு .., நன்றி நண்பரே ..!
ReplyDeleteஅருமையான தகவல் நண்பா
ReplyDeleteபுதிய தகவல் அன்பரே நன்றி
ReplyDeleteநல்ல தகவல் ! நன்றி நண்பரே !
ReplyDelete