Monday, June 4, 2012

எந்த வகையான File Type பற்றி ஒரே இடத்தில அறிந்துக்கொள்ள



வணக்கம் நண்பர்களே நாம் தினமும் பயன்படுத்தும் தொழில்நுட்ப உலகில் நாளுக்குநாள் பலபல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது .. அனுதினமும் கணிணிக்கு முன் உட்காரும் நாம் பல தரப்பட்ட கோப்புகளை திறந்து பார்க்கிறோம் . பயன்படுத்துகிறோம் , மற்றவர்களோடு பகிர்கிறோம் ..போன்ற பல வேலைகளை செய்கிறோம் ....
ஆரம்ப காலகட்டங்களில் சில வகையான Format இருந்தன காரணம் அன்றுள்ள மென்பொருள்கள் மிகக்குறைவு ..

மென்பொருள்கள் உருவாக்கும் போது அந்த மென்பொருளில் திறக்கும் கோப்புகளை தான் Format-களாக பிரித்து வைப்போம் ..

காலம் ஆக ஆக மென்பொருள் உருவாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது .. இன்றைய அளவில் தினமும் பல மென்பொருள்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது ..அதற்கான Format-களையும் அதோடு வெளியிடுகிறார்கள் . உதாரணமாக MP3 format கோப்புகளை ஏதாவது ஒரு Player மென்பொருளில் திறப்போம் .. தொழில்நுட்ப உலகில் உள்ள அனைத்து வகையான Format-களையும் அறிந்து கொள்ள உதவுகிறது .. A-Z மற்றும் Symbol போன்ற வகைகளில் Format(Exe)-களை பிரித்து வைத்துள்ளது இந்த தளம் ..

சில நேரங்களில் உங்களுக்கு நண்பர்கள் ஏதாவது ஒரு Exe கோப்பை அனுப்பி வைப்பார்கள் . அது என்ன வகை Format என்று தெரியாமல் குழம்பி கொண்டு இருப்பீர்கள் . அந்த நேரங்களில் உங்களுக்கு இந்த தளம் மிகவும் பயனுள்ள விதமாக இருக்கும் .. மென்பொருள் உருவாக்கத்தில் இருப்பவர்களுக்கும் இந்த தளம் பயன்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
 
கீழே உள்ள Input Box-ல் File Type வகையை Type செய்து Search பொத்தானை அழுத்தவும்



உ.தா(MP3 , WMV , MP4 , DOC, DOCX, 3GP ,AVI , MHTML, XML , PHP , etc)



தேவையான  File Type -பக்கத்துக்கு சென்றவுடன் " technical data "

என்பதின் கீழ் Click This Link " என்பதை அழுத்தியவுடன் எந்த மென்பொருளில் அக்கோப்பை திறக்கலாம் என்பதையும் கூடுதலாக பல தகவல்களையும் இந்த தளம் தருகிறது  .

கணிணி யில் தினமும் பல வகை கோப்புகளை பயன்படுத்தும்  நாம் அந்த கோப்புகளின் File Type -யும் எந்த மென் பொருளில் அந்த கோப்புகளை திறக்கலாம் என்று தெரிந்து கொண்டால் கணிணியை வேகமாக் நம்மால் இயக்க முடியும் .

இணையதள முகவரி http://filext.com/
நன்றி ..

5 comments:

  1. உபயோகமான பகிர்வு .., நன்றி நண்பரே ..!

    ReplyDelete
  2. அருமையான தகவல் நண்பா

    ReplyDelete
  3. புதிய தகவல் அன்பரே நன்றி

    ReplyDelete
  4. நல்ல தகவல் ! நன்றி நண்பரே !

    ReplyDelete