Friday, December 9, 2011

இணையத்தில் நேரத்தை சேமிக்க ஐந்து சிறந்த வழிகள்



இணையத்தில் பல மணி நேரம் நாம் இருந்தாலும் அந்த நேரங்கள் உண்மையில் மிகவும் பயனுள்ளவிதமாகத்தான் இருக்கிறதா ..



எப்படி நேரத்தை மிச்சப்படுத்தி பயனுள்ள விதத்தில் நாம் நம் இணைய நேரத்தை மாற்றலாம் .

1.சிறந்த உலாவியில் இணையத்தை பயன்படுத்துங்கள் : 


நாம்  பயன்படுத்தும் உலாவிகளில் எனக்கு பிடித்தது பயர்பாக்ஸ் தான் நல்ல வேகமும் , அதிக திறனையும் கொண்டு நன்கு இயங்ககூடியது . சில ஜாவா ஸ்கிரிப்ட் - குரோம் உலாவில் கூட ஒழுங்காக காட்டப் படாது .

புக் மார்க் செய்வதற்கு நெருப்புநரி உலாவி தான் சிறந்தது .மேலும் இணையஇணைப்புக்கு தகுந்தவாறு தன்னை மாற்றி கொள்ளும் ஒரு உலாவி .
மொபைலில் இருந்து கணிணி-க்கு கொடுக்கும் இணைய இணைப்பின் வேகம் 50-60 KBPS தான் இருக்கும் .ஒரே நேரத்தில் பல டேப்களை திறந்து கொள்ளலாம் .டேப்பும் அதன் தலைப்பும் தெளிவாக தெரியும் . அனால் க்ரோமில் இது அப்படி தெரியாது .



அந்த இணைய இணைப்பில் தெளிவாக இணையப் பக்கங்களை வரிசைப்படுத்துகிறது . மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீட்சிகள் குவிந்து கிடக்கிறது. க்ரோமும் அதிவேகமும் ,நல்ல திறனுடன் இயங்க கூடிய உலாவி 
இப்போது க்ரோமிலும் ஆயிரக்கணக்கான நீட்சிகள் காணப்படுகிறது . 

ஒபேரா ஒரு நல்ல உலாவி .இதிலும் புக் மார்க் ,OPERA TURBO என்னும் சிறப்பு வசதி இதில் உள்ளது .இது வேகம் குறைவான இணைப்பில் சரி செய்து , இணைய தகவல் பரிமாற்றத்தின் அளவை குறைக்கிறது . 
எந்த உலாவியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சரியாக தேர்ந்தெடுங்கள் .



2.மிகச்சிறந்த நீட்சிகளையும் பயனுள்ள பக்க உறுப்புகளையும் நிறுவுங்கள் : (Add useful Extensions/Plug-ins/Add-ons)


நல்ல உபயோகமுள்ள நீட்சிகளை உலாவிகளில்நிறுவினால் எளிதாக சில வேலைகளை முடிக்கலாம் .  சிறந்த உலாவிகளின்நீட்சிக்கான பக்கங்கள் கீழே :

FirefoxGoogle Chrome and Safari 

3.உலாவிகளின் சுருக்கு விசைகளை தெரிந்து கொள்ளுங்கள் :


உலாவிகளின்  வேகமாக உலாவ முக்கியமானவை ,இந்த குறுக்கு விசைகள் நாம் நேரமும் சேமிக்கப் படும் . உலாவிகளின் அனைத்து சுருக்கு விசைகளின்

பக்கங்களுக்கான சுட்டிகள் கீழே :

Firefox , Chrome , Internet Explorer, and  Apple Safari .


 4.உலாவியின் முதல் பக்கம் வெறும் பக்கமாக மாற்றுங்கள் : 


சில உலாவியில் திறந்த உடனேயே சில தளங்கள் அல்லது ஓறிரு தளங்கள் திறக்கப்படும் .இதனால் உங்கள் உலாவியின் வேகம் பாதிக்கப்படக்கூடும்  பாதிக்கப்படும் .இதனை அமைப்பதற்கு 


TOOLS - OPTIONS - CLICK GENTRAL TAB - WHEN FIREFOX STATUS - SHOW BLANK PAGES 




5. கடவுச்சொற்களைப் பாதுகாத்து வையுங்கள்  :

இணைய த்தில் முக்கியமே இதுதான் தற்போது பெருகிவரும் ஹக்கர்களிடம் இருந்து உங்கள் கடவுச்சொல்லை பாதுகாக்க PASSWORD MANEGER போன்ற மென்பொருள்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள் . உங்கள் உலாவியில் சேமித்து வைத்தால் எளிதில் ஹாக் செய்யப்பட வாய்ப்பு உள்ளது . பல தளங்களுக்கு சென்று பதிவு செய்து உறுப்பினர் ஆக இருந்தால் கீழே உள்ள மென்பொருளை பயன்படுத்தவும் .


KeePass Password Safe

4 comments:

  1. நேரத்தை சேமிப்பது என்பது முக்கியமான விடயம்தான். பல வழிமுறைகளை அறியத் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. Ungal thalam.....mobile-la
    sariya theriyalai....
    Font problem ullathu.....
    Sila fonts....ok......
    Oru sila paragraph......padikka
    mudiyalai.....
    Sari pannavum......

    ReplyDelete
  3. @ Mohamed Faaique said...

    நேரத்தை சேமிப்பது என்பது முக்கியமான விடயம்தான். பல வழிமுறைகளை அறியத் தந்தமைக்கு நன்றி //

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

    நன்றி

    ReplyDelete
  4. @ NAAI-NAKKS said...

    Ungal thalam.....mobile-la
    sariya theriyalai....
    Font problem ullathu.....
    Sila fonts....ok......
    Oru sila paragraph......padikka
    mudiyalai.....
    Sari pannavum......//

    ஒபேரா பயன்படுத்திப்பாருங்கள்

    தெளிவாக தெரியும் ..

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..

    ReplyDelete