Wednesday, October 19, 2011

பிளாக்கர் பதிவுகளின் பின்னணியில் படங்களை எப்படி இணைக்கலாம்



பிளாக்கர் தளங்களில் பதிவுகளை எழுதும் போதும் அதன் பின்னணியில் அனைத்தும் வெள்ளை நிறமாக இருக்கும் . நாம் கருப்பு வண்ணத்தில் எழுதினோம் என்றால் இது இப்படி இருக்கும் . வெள்ளை கலரில் எழுதுவோம் என்றால் அதன் பின்னணி கருப்பாக இருக்கும் . 


 இப்படி எழுதும் பதிவுகளின் பின்னணியில் படங்களை இணைத்தால் எப்படி இருக்கும் பார்ப்பதற்கு சற்று அழகாக தோன்றும் . இதை எப்படி நம் தளங்களில் பயன்படுத்துவது என்று பார்போம் . பின்னணி வண்ணம் கொடுப்பது ஒன்றும் பெரிய வேலை இல்லை .


 எழுதின அனைத்தையும் தெரிவு செய்து TEXT BACKROUND COLOUR என்னும் பிளாக்கர் இடுகையின் எழுதியில் (BLOGGER POST COMPOSER) உள்ள கருவியை பயன் படுத்தி எளிதில் செய்து விடலாம் .


<div style="background:url(URL ADDRESS OF THE PIC) no-repeat;">
Your text goes here....
</div>



1. URL ADDRESS OF THE PIC -என்னும் இடத்தில் படத்தின் URL ஐ கொடுத்து விடுங்கள் . 

2.Your text goes here... என்னும் இடத்தில் நீங்கள் எழுதின பகுதி(பதிவின் டெக்ஸ்ட் அனைத்தையும் copy செய்து அங்கு paste செய்யுங்கள் ) ..

3.பின் அனைத்தையும் அதாவது <div ...</div> copy செய்து blogger 

post editer இன் HTML பகுதியில் போட்டு விடுங்கள் .






1. நாம் எழுதும் பகுதிகள் அந்த படத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் .  

2.இரண்டு பத்தி எழுதி விட்டு பெரிய படத்தை போட்டால் முழு படமும் வராது .

3.படத்தை பிளாக்கர் தளங்களில்(பிகாஸா) பதிவேற்ற வேண்டாம்.

4.photo buket மற்றும் photo host தளத்தில் இணைத்து அதன் url 

இங்கு கொண்டுவந்து கொடுங்கள் . 


இந்த பதிவின் பின்னால் ஒரு மலரை இணைத்திருக்கிறேன் .

ஒட்டு பட்டைகள் கீழே (அடியில் )இருக்கின்றன ....

அதை பயன்படுத்தி உங்கள் வாக்குகளை அளியுங்கள் .

நன்றி ....

உங்கள் மேலான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது . 

9 comments:

  1. தமிழ் வண்ண திரட்டிக்கு வருகை தாருங்கள் "http://techstones.blogspot.com"

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு....தேவைப்படும் போது பயன்படுத்தி பார்க்கிறேன்....

    ReplyDelete
  3. அன்றைக்கு பார்த்ததிற்கும் இன்றைக்கு உங்கள் பார்பதற்கும் எவ்ளோ வித்தியாசம் டிசைன் டெம்ப்ளட் பதிவு எல்லாமே சூப்பர் மச்சி

    ReplyDelete
  4. நல்ல பதிவு.
    நன்றி.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_20.html

    ReplyDelete
  5. புது விசயம்.. பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. தேவையான பதிவு.. அருமை..

    ReplyDelete
  7. புதிய தகவலை தந்து பயன் பெற உதவும் செய்திகளை
    தோழருக்கு நன்றி

    ReplyDelete