Friday, May 8, 2015

மொபைலில் பயன்படுத்தி வந்த UC Browser தற்போது கணினிகளுக்கும்



மொபைலில் அதிக வாடிக்கையாளர்கள் கொண்ட யு சி உலாவி  தனது வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பெர்சனல் கணினிகளுக்கும் உலாவியை வெளியிட்டுள்ளது . சமீபமாக UC நிறுவனம் எடுத்த சர்வேயில் மொபைல் உலாவியை பயன்படுத்தும் பலரும் அவர்களின் உலாவியின் வேகம் மற்றும் அதன் எளிமையான இடைமுகம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விண்டோஸ் கணினிகளில் இயங்கும் UC மென்பொருளை வெளியிட்டு உள்ளனர் .


வசதிகள் 


புதிய வசதிகளுடன் வந்துள்ள இந்த உலாவி உலாவுவதற்கு வேகமாகவும் .விளம்பரங்களை தடுக்கும் Adblock  என்னும் நீட்சி யுடன்நிறுவப் படுகிறது .
மேலும் க்ரோமில் பயன்படுத்தும் அனைத்து நீட்சிகளையும் இதில் பயன்படுத்தலாம் .



Cloud sync  வந்துள்ள உலாவி  நீங்கள்செய்யும் புக் மார்க் ,திறக்கும் டேப்கள் போன்றவற்றை மேகக் கணினி மூலம் அவர்களது சர்வர்களில் சேமிக்க ப பட்டு பின் மொபைல் உலாவியை பயன்படுத்தும் போதும் பயன்படுத்தி கொள்ளும் படி அமைக்கப் பட்டுள்ளது . download இடைமுகம் எளிதாக பதிவிறக்குபவற்றை வகைகளாக பிரித்து Resume Support உள்ளது .

முகப்பு பக்கம் 


இதன் முக பக்கம் பிரபல இணையதளங்களின் இணைப்புகளுடன் இருக்கும் .


India Version Genral version என்ற இரு பதிப்புகளில் ஒன்றும் அதிக வேறுபாடு  இல்லை இந்தியா பதிப்பில் சில பிரபலமான இந்திய தளங்களின் இணைப்புகள் உள்ளன .

http://pc.ucweb.com/
File size : 45MB 
Virus total Scan report   

1 comment: