Monday, May 11, 2015

இணையத்தில் இருந்து மென்பொருள்/கோப்புகள் பதிவிறக்கும் முன் பாதுகாப்பானதா என்பதை அறிய

எப்போதும் இணையத்தில் இருந்து மென்பொருள் அல்லது கோப்புகளை பதிவிறக்கும் போது அதன் பாதுகாப்பு தன்மையை குறித்து பயப்படுகிறீர்களா?
நீங்கள் பதிவிறக்கும் மென்பொருள்களில் இருந்து மறைந்து வரும் வைரஸ் உங்கள் கணினியில் உள்ள தகவல்களை திருட வாய்புகள் உண்டு .இவற்றை தடுப்பது எப்படி சாதாரண இமேஜ் கோப்புகளில் கூட வைரஸ் வைத்து அனுப்ப முடியும் . எனவே நீங்கள் எந்த கோப்புகளை இணையத்தில் இருந்து உங்கள் கணினிக்கு தரவிறக்கும் முன் சோதித்து அறிவது எப்படி என்பதை விளக்குகிறது இந்த பதிவு .

வைரஸ் டோடல் :



இணையத்தின் எந்த இணையதளங்களில் இருந்தும் கோப்புகளை (zip,exe,pdf,ppt,)தரவிறக்கும் முன்னர் உங்கள் கோப்புகளை 40 பாதுகாப்பு கருவிகளை கொண்டு சோதித்து அறிந்து உங்கள் கோப்பு எப்படி பட்டது என்பதை தெளிவாக பட்டியல் இட்டு காட்டுகிறது இந்த இணையத்தளம் .

கோப்பின் முகவரியை உள்ளிட்டு ஸ்கேன் பட்டனை அழுத்தவும் .



view last analysis என்பதை அழுத்தவும்.



பின்வரும் பக்கத்தில் 63 மென்பொருள்களில் உங்கள் கோப்பை ஸ்கேன் செய்திருக்கிறது .


நீங்கள் உங்கள் தளத்தில் இருந்து கொடுக்கும் வெளி இணைப்புகளுக்கும் இந்த முறையில் ஸ்கேன் செய்த முகவரிகளுடன் பகிரலாம் . பாதுகாப்பான முகவரிகளை நம்பி கிளிக் செய்வார்கள் .

நீட்சிகள் :(ரைட் கிளிக் ஸ்கேன் )


குரோம் ,மொசில்லா ,இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் போன்ற வற்றில் நீட்சிகளை நிறுவுவதன் மூலம் பின்வரும் படங்களில் உள்ளது போன்ற எந்த பக்கத்திலும் இருந்து ரைட் கிளிக் செய்வதன் மூலம் SCAN  செய்ய முடியும் . 


https://addons.mozilla.org/en-US/firefox/addon/vtzilla/ (Mozilla Firefox)

https://www.virustotal.com/static/bin/vtExplorer.exe (Internet Explorer)

4 comments: