Thursday, May 7, 2015

எந்த மென்பொருளில் எவ்வளவு இணைய அளவு (Internet Data usage)எடுத்துக் கொண்டது என்பதை அறிய


தினமும் பல வேலைகளுக்கு இணையத்தை சார்ந்தே இருக்க வேண்டி உள்ளது . இணையத்தை பயன்படுத்துவோரும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகின்றன . தினமும் அதிக அளவு இணையத்தை பயன்படுத்தினால் அதன் பில் எகிறி விடும் .அதன் அளவை அறிந்து செயல் பட்டால் பணமும் மிச்சம் .

நெட் லிமிட்டர் என்னும் மென்பொருள் நெட்வொர்க் தொடர்பான மென்பொருள் .எந்த மென்பொருள்கள் எல்லாம் இணையத்தில் இயங்கி கொண்டு இருக்கின்றன . அது எவ்வளவு இணைய அளவை எடுத்துக் கொண்டது என்ற பட்டியலை நம் கண் முன் சொல்லும் அருமையான மென்பொருள் .  பின்னணியில் இருந்து எந்த மென்பொருள் இயங்கி இன்டர்நெட் டேட்டாவை எடுத்துள்ளன என்பதில் இருந்து .சில குறிப்பிட்ட மென்பொருளுக்கு இந்த அளவு வேகம் மட்டுமே போக வேண்டும் என்பதை தீர்மானிப்பது போன்ற பல வேலைகளை செய்யும் அற்புதமான மென்பொருள்



1.மென்பொருளை நிறுவி திறந்து என்ன மென்பொருள்கள் இணையத்துடன் இணைக்க பட்டுள்ளன என்பதை வரிசைப் படுத்தும் .

2.மென்பொருளை தேர்வு செய்து விட்டு traffic Status என்பதை கிளிக் செய்தால் அந்த மென்பொருளில் எவ்வளவு இணைய அளவு பயன்படுத்தினோம் என்பதை எளிதாக அறிந்து கொள்ள முடியும் .


3.நெட் லிமிட் செய்வதற்கு மட்டும் மென்பொருளை விலை கொடுத்து வங்கி இருக்க வேண்டும் . மற்ற பயன்பாடுகள் அனைத்தும் இலவசம்.

Website : http://www.netlimiter.com/

0 கருத்துரைகள்:

Post a Comment