Friday, April 24, 2015

இணையதளங்களின் பழைய தோற்றங்களை(வருடங்களை ) காண -இணைய ஆவணகம்



வரலாற்றை திரும்பி பார்ப்பது என்பது மிகவும் சுவாரசியமான ஒன்று . கடந்த பத்து வருடங்களில் நாம் எப்படி இருந்தோம் .ஒவ்வொரு வருடமும் நம்முடைய வளர்ச்சி எப்படி இருந்தது .இப்படி பழைய நினைவுகளை திரும்பி பார்ப்பது நம் வாழ்கையில் இருந்து கற்று  கொள்ள உதவும் .அப்படி கடந்த 15 - வருடங்களில் ஒட்டு மொத்த இணையமும் எப்படி இருந்தது என்பதை பார்ப்பது அருமையான விஷயம் .

இணையத்தில் இன்று நாம் பயன்படுத்தும்  இணைய தளங்கள் சில வருங்களுக்கு முன்னால் எப்படி இருந்தது . இந்த இணயதளம்  இது வரை எத்தனை பக்கங்களை தன நினைவ கத்தில் சேமித்து வைத்து இருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம் . அர்சிவ்.ஆர்க் என்ற லாப நோக்கமற்ற நிறுவனம் 1996 -இல் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 2001-ல்பயன்பாட்டுக்கு வந்தது .

இணையத்தின்  டிஜிட்டல் நூலகமாக விளங்கிவரும் இந்த நிறுவனம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் 200 தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகிறது .

2005-ல் 40-பில்லியன் பக்கங்களையும் ,2006,2007,2008 களில் 85-பில்லியன் பக்கங்களையும் .2009,2010,2011,2012 களில் 150-பல்லியன் பக்கங்களையும் தன் நினைவகத்தில் சேமித்து வைத்து இருக்கிறது .


1.http://archive.org/web/  செல்லுங்கள்

2.எந்த இணையதளத்தை பற்றி தெரிய வேண்டுமோ அந்த இணையதளத்தின் url-லை உள்ளிடுங்கள் .

3.பின் வரும் பக்கத்தில் கீழே படத்தில் காட்டியுள்ள படி எத்தனை பக்கங்களை எந்த நாளில் இருந்து  சேமித்து வைத்துள்ளது என்பது தெரிந்து விடும் .



4. பின் வருடத்தை தெரிவு செய்தால் அதன் கீழ் அந்த வருடத்தின் மொத்த மாதங்களில் ஊதா நிறத்தில் வட்ட மிட்டிருப்பவையை  கிளிக் செய்தால் அந்த பக்கம் வந்து விடும் .


உதாரணத்திற்கு BLOGGER.com 1999-Oct-12 மணி 2:25:31 என்பதை பதிவு செய்திருக்கிறது . இந்த இணையதளத்தில் உங்கள் இணையதளம் வரவில்லை என்றால் இதே பக்கத்தில் மற்றும் ஒரு உள்ளிடு உள்ளது .அதில் உங்கள் முகவரியை கொடுத்து Save Page என்பதை அழுத்தி சேமித்து கொள்ள முடியும் .


5 comments:

  1. எனது தளத்தை சேமித்து பார்த்தேன்... எத்தனை மாற்றங்கள்...!

    நன்றி...

    ReplyDelete
  2. thanks bro i check my blog also

    ReplyDelete
  3. நல்ல உபயோகமான தகவல்! நன்றி!

    ReplyDelete
  4. superb bro.. i checked some sites.. cool

    ReplyDelete
  5. superb bro.. i checked some sites.. cool

    ReplyDelete