Tuesday, July 31, 2012

தொட்டால் விவரிக்கும் இணைப்புகள் (Tool Tip) # 2

இணையத்தின் அடிப்படையே இணைப்புகள் (links) தான் ஏனென்றால் இந்த இணைப்புகளை வைத்து தான் வேறு வேறு பக்கங்களுக்கு நாம் செல்கிறோம் .
இணைப்புகள் இல்லை என்றால் இணைய இல்லை என்று கூறலாம்.
காரணம் அது தான் ஆரம்பம் . அதனை இணைய முகவரி என்று அழைக்கலாம் .
ஏற்கனவே எழுதிய பதிவில் பல நண்பர்கள் விரிவாக எழுதும் படி கேட்டு கொண்டார்கள் . சாதாரணமாக கீழ் உள்ள வாறு HTML code-ஐ கொடுக்கிறோம்.

Monday, July 30, 2012

ஆன்லைனில் டைகிராம் இலவசமாக வரையலாம் !!

இணையத்தில்  டைகிராம் வரைய உதவும் ஆன்லைன் கருவி முற்றிலும்  இலவசமாக பயன்படுத்தலாம் . எளிதாக டைகிராம் வரைய முடியும் . சாதாரண டைகிராமில் இருந்து மேம்ப்பட்ட டைகிராம் வரை இந்த தளத்தில் வரைய முடியும் . இது மென்பொருளாக இல்லாமல் ஆன்லைனிலேயே பயன்படுத்த கூடிய வகையில் உள்ளது .

இந்த தளத்தில் நம் விருப்பப்படி டைகிராமை உருவாக்கி பதிவிறக்கி கணினியில் சேமித்து கொள்ள முடியும் .

எப்படி பயன்படுத்துவது டைகிராம் கருவியை :



முதலில் இந்த தளத்துக்கு சென்று தேவையான வடிவத்தை தேர்வு செய்து




Zoom செய்து பார்த்து வரையும் வசதி இதில் உள்ளது  .

 சாதாரணமாக சேமித்தால் Xml வடிவில் சேமிக்கும் . வேறு Format -களில் சேமிக்க வேண்டுமானால் Save as என்பதை கிளிக் செய்து எந்த Format-ல் வேண்டுமோ அதில் சேமிக்கலாம் .

பாதி  வரைந்த டைகிராமை கணிணியல் பதிவிறக்கி விட்டு மீண்டும் திருத்த (Edit) வேண்டுமானால் File -Import File என்பதை கிளிக் செய்து அதை Edit செய்யலாம் .

பின்வரும்  File Format-களில் உள்ள டைகிராம்-களை திருத்த முடியும் . PNG, GIF, JPG, PDF, and SVG.

மொத்தத்தில்அனைவரும் பயன்படுத்த எளிதாகவும் இலவசமாக கிடைப்பதால் சிறந்த ஆன்லைன் டூல்-ஆக இருக்கிறது .


பயன்கள்  :

இணையதளம் நன்றாக பயன்படுத்த எளிதாக வடிவமைக்கப் பட்டுள்ளது

பதிவு செய்ய தேவை இல்லை

பல வடிவங்களில் டைகிராம் வரைய முடியும் .

ஒன்றுக்கும் மேற்பட்ட File Format-களை ஆதரிக்கிறது .

Via @ : http://www.diagram.ly/

Wednesday, July 25, 2012

மொபைலில் தமிழ் அகராதியை பயன்படுத்த

வரும் காலங்களில் தமிழே மறைந்து போகும் அளவிற்கு தமிழர்களே தமிழை பேசமால் இருக்கின்றனர் . வளர்ந்து விட்ட தொழில்நுட்ப உலகில் தமிழ் மொழியை பற்றி சிந்திக்க கூட யாரும் கிடையாது . தமிழ் சொற்களுக்கு பொருள் பலருக்கும் தெரியாமல் உள்ளது . தமிழ் படித்தவர்களே தமிழ் சொற்களுக்கு பொருள் தெரியாமல் திணறுகிறார்கள் .

Tuesday, July 24, 2012

இணைய பக்கங்களை டெக்ஸ்ட்-ஆக நொடியில் மாற்ற


வணக்கம் நண்பர்களே , நாள் தோறும் பல இணையப்பக்கங்களை பார்க்கிறோம் . பார்க்கும்  அனைத்து பக்கங்களும்  HTML/CSS கொண்டு வடிவமைக்கப் பட்டு உள்ளது . Menu Bar , Header , Footer ,Post Body , Side Bar , போன்றவை அந்த அந்த இடங்களில் HTML / CSS மூலம் அந்த இடங்களில் சரியாக நிற்கின்றன . பார்க்கும் இணைய பக்கங்களை Text ஆக மாற்ற பயன்படும் கருவியை தான் பார்க்க போகிறோம் .

Friday, July 6, 2012

பிளாக்கர்: Reply Comment-களுக்கு புதிய வடிவம்

வோர்ட் பிரஸ்-ல் இருந்த reply comments என்னும் வசதி பல நாட்களாக பிளாக்கர் தளத்தில் இல்லை .இதனால் வாசகர்கள் குறிப்பிட்டு தான் அதற்கு பதில் அழிப்பார்கள் . பதிவுகளில் முக்கியமானது  அதன் கருத்துரைகள் தான் . பதிவில் பலரின் கருத்துக்கள் நம்மை மேலும் பல பதிவுகள் எழுத தூண்டும் .