Friday, June 1, 2012

இந்தியாவின் சுற்றுலா வழிகாட்டி -India Travel Guide & Tourist Places




பலரும் கோடை விடுமுறையில் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவோம் .. கோடை வெயிலை இருந்து குளிர் பிரதேசங்களுக்கு சென்று வரும் போது மனம்  மகிழ்ச்சியும் அடையும் . பலருக்கும் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று வர வேண்டும் என விரும்புவார்கள் . அப்படி பட்டவர்களுக்கு ஆன்லைனில் வழிகாட்டியாக உள்ள தளம் தான் இது .

இந்தியாவின் சுற்றுலா பிரியர்களுக்கு பயனுள்ள தளம் . மேலும் இந்த தளத்தின் மூலம் பஸ் ,விமான ,ரயில் டிக்கெட் -களை பூக் செய்யும் வசதியும் உண்டு . இந்தியாவின் முக்கிய சுற்றுலா
தளங்களை பட்டியலிடும் இந்த தளம்  சுற்றுலா செல்பவர்களுக்கு வரபிரசாதமாக உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .

சுற்றுலா சென்று வந்தவுன் நாம் எடுத்த புகைப்படங்களை இந்த தளத்தின் மூலம் பகிர்ந்து கொள்ளவும் முடியும் . அந்த கால நிலைகளுக்கு ஏற்ப எந்த பகுதிக்கு பயணம் செய்யலாம் என்பதை யும் சொல்லி தருகிறது . இந்த தளத்தின் முகவரியும் தலைப்பும் "இந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் " . மேலும் சுற்றுலா தொடர்பான கட்டுரைகளையும் நம்மிடத்தில் பகிர்ந்து கொள்கிறது .
 
சுற்றுலா  தளங்களில் உள்ள ஹோட்டல்கள் ,சுற்றுலா தளம் தொடர்பான வரைபடங்கள் (Map) அங்கு நாம் பயணிக்க போகும் பேருந்துகள் , வானிலை ஆகியவற்றை டெல்லி , மும்பை , பெங்களூர் , சென்னை,புனே ,ஹைதராபாத் போன்ற  பல நகரங்களுக்கு தருகிறது .



இணையதள முகவரிhttp://www.mustseeindia.com/

7 comments:

  1. அருமையான தகவல் நண்பரே ..!

    ReplyDelete
  2. இந்த நேரத்துல எல்லாருக்கும் தேவைப்படும் தகவல் நன்றி .....

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு ! நன்றி நண்பரே !

    ReplyDelete
  4. நல்ல தகவல் ! நன்றி

    ReplyDelete
  5. பயனுள்ள தகவல்.தொடருங்கள்.

    ReplyDelete