Tuesday, October 11, 2011

நீங்கள் ப்ளாக் ஆரம்பிக்க நான்கு சிறந்த இலவச தளங்கள்



ஒரு காலத்தில் இணையதள இணைப்பை வாங்குவதே பெரிய ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று எல்லாம் தலைகீழாய் மாறிப்போய் விட்டது . ஏன் என்றால் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி எல்லையை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது . 
  ஒரு பத்து வருடத்திற்கு முன்னால் பணமுள்ள வர்கள் மட்டும் தான்ஒரு புதிய இணையதளம் தொடங்கி அதை நடத்த முடியும் . ஆனால் இன்று சாதாரண பாமரான் கூட தளம் ஆரம்பிக்கலாம்  என்று பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இலவச சேவைகளை வழங்கி வருகின்றன . இதனால் இன்று என்ன முடியாத இணைய பக்கங்கள் இணையத்தில் உலா வருகின்றனர் .

இங்கு  நாம் பார்க்க போது  இலவசமாகவும் சிறந்த ப்ளாக் ஒன்றும் தொடங்குவதற்கு ஒரு நான்கு தளங்களை பார்க்கபோகிறோம் . இந்த தளங்கள் அனைத்தும் ஏற்க்கனவே உங்களுக்கு தெரிந்தும் இருக்கலாம் . 






 Pyra Labs என்பவரால் தொடங்கப்பட்டது  இந்த தளம் .தொடங்கப் பட்ட ஆண்டு  1999 .அதன் பின்  2006 ஆண்டு கூகுள் நிறுவனத்தால் வாங்கப்பட்டது .  blogspot.com என்னும் main url கொண்டு இயங்குகிறது . 

இந்த தளம் கூகிளுடன் இணைந்தவுடன் பல பயனர்களை சென்றடைந்தது . கூகுள் தளமும் பிளாக்கர் பயனர்களுக்கு நாளுக்கு நாள் பல வசதிகளை தந்து கொண்டு இருக்கிறது . இதன் அசுர வேகமும் இந்த தளத்தில் உள்ள எளிமையான வசதியின் காரணமாக இது தொடமுடியாத உயரத்தையும் தொட்டு எட்ட முடியாத எல்லைகளையும் தொட்டது . இருபதாம் நூற்றண்டின் அசைக்க முடியாத தளமாக தன்னை ஆக்கி கொண்டது . 

பலரையும் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி அவர்களையும் அவர்கள் கருத்துக்களையும் உலகிற்கு காட்டின உரிமை பிளாக்கர் தளத்தையே சாரும் . மேலும் தளங்கள் வாசகர்களுக்கு விளம்பரமும் கொடுத்து அவர்களை வருமானமும் பெறச் செய்தது . 
இது ப்ளாக் ஆரம்பிக்க சிறந்த தளம்.

2.wordpress.com







வோர்ட் பிரஸ் தளம் இரண்டு தளங்களை கொண்டது . முதலில் 2003 ஆரம்பிக்கப்பட்டது wordpress.org  .ஆரம்பத்தில் இது CMS tool வுடன் சொந்த டொமைனை விலைக்கு தான் கொடுத்து வந்தது . அதன் பின் 2005 ஆம் ஆண்டு இலவசமாக ப்ளாக் ஆரம்பிக்க wordpress.com . இது தோடுபொறிகளுக்கு ஏற்றது போல் அவர்களே அமைத்து விட்டது . ப்ளாக் வரிசையில் இதை பிளாக்கர் தளத்தோடு ஒப்பிடலாம் . பல பிளாக்கர் பயனர்கள் முதலில் பிளாக்கரில் இருந்து விட்டு பின் வோர்ட் பிரசுக்கு மாறி இருக்கிறார்கள் என்றால் அந்த தளத்தின் வலிமையை நீங்களே புரிந்து கொள்ளலாம் . 

3.Tumblr.com






இது ப்ளாக் உலகில் வளர்ந்து வரும் ஒரு அற்புதமான தளம் .இதன் 2007 ம் ஆண்டு தொடங்க பட்ட இந்த தளம் . படிப்படியாக தற்போது உயர்ந்து வருகிறது . David Karp மற்றும் Marco Arment ஆகியோரால் தொடங்கப்பட்டது . தற்போது வோர்ட் பிரஸ் தளத்தின் அடுத்த இடத்தில் உள்ளது தம்புளர் தளம் , பல அற்புதமான வசதிகளை கொண்டுள்ள இந்த தளம் microblogging அடிப்படையில் இயங்குகிறது . 

4) Posterous.com









2008 தொடங்கப்பட்டது இந்த தளம் தன்னையும் ஒரு தனி ஆளாக நிறுத்தி பல வாடிக்கையாளர்களை கவரக்கூடிய அமைப்பில் உள்ளது .
தற்போது இந்தளதுக்கு தம்புளர் (tumblr ) கடும் போட்டி நிலவுகிறது .  

9 comments:

  1. suppar innum niraiya ethir pakkurom mikavum payan ulla pathivu

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. இவ்வளவு இருக்கா??? எனக்கு தெரிஞ்சது ப்லாக்கர் மட்டுமே!!

    ReplyDelete
  4. கடைசி இரண்டும் இப்பதான் கேள்விபட்டேன்

    ReplyDelete
  5. எனக்கு ப்ளாக்கர், வேர்ட்பிரஸ் மட்டுமே தெரியும்

    ReplyDelete
  6. நல்ல பதிவு.
    நல்ல தகவல்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நல்ல தகவல் நன்றி...............

    ReplyDelete
  8. தேடப்படக் கூடிய தகவல்...

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete