Friday, September 30, 2011

பதிவுகளை வாசகர்கள் மதிப்பிட (ratings)




பிளாக்கர் , வோர்ட்பிரஸ் ,இன்னும் பிற ப்ளாக் எழுதும் தளங்களில் 
வந்து படிக்கும் வாசகர்கள் நாம் எழுதிய பதிவை மதிப்பிடுவதற்கு 
ஏற்றவாறு ஒரு மதிப்பிடும் பக்க உறுப்பை ஏற்படுத்தினால் நாம் தளத்திற்கு மேலும் அழகு சேர்ப்பதாக இருக்கும் . 

 PollDaddy என்னும் இந்த தளம் இதற்கு உதவி செய்கிறது. 
நீங்கள் சொல்லலாம் . பிளாக்கரில் ஏற்கனவே இந்த வசதி இருக்கிறது என்று . நான் சொல்வது அதில் மதிப்பிட தான் முடியும் . லைக் ( LIKE )செய்யா முடியாது . டிஸ் லைக்(DIS LIKE) செய்யவும் வாய்ப்பில்லை .

மேலும் எத்தனை பேர் அதை லைக் செய்திருக்கிறார்கள் என்று பார்த்துக் கொள்ளலாம் . 

இந்த வசதியை பெற நாம் செய்யா வேண்டியவை :

1.PollDaddy தளத்திற்கு சென்று  ஒரு கணக்கை பதிவு செய்து 

கொள்ளுங்கள்.

2.இப்பொழுது உங்கள் டாஷ்போர்டு-க்கு செல்லுங்கள் .

3.CREATE NEW என்பதை கிளிக் செய்து drop down button னில் தேர்ந்தெடுங்கள்.

4.அதை உங்களுக்கு ஏற்றவாறு சரி செய்து கொண்டு SAVE Rating Widget button அழுத்தி விடுங்கள் .

5.மீண்டும் டாஷ் போர்டு-க்கு இழுத்து செல்ல படுவீர்கள் . 
அங்கு உருவாக்கின பக்க உறுப்புக்கு பெயர் கொடுத்து நிரலை பெற்று
கொள்ளுங்கள்  .

6.BLOGGER DASH BOARD க்கு வந்து ADD PAGE ELEMENT செய்து 
PASTE செய்து இடுகைகளின் கீழே இழுத்து விட்டு விடுங்கள் .

அவ்வளவு  தான் இனி பதிவுகளை எளிதாக வாசகர்கள் மதிப்பிடலாம் .

1 comment:

  1. பாஸ்ஸ்.. நீங்க உங்க ப்லாஅக்;ல செய்து காட்டிவீங்க`ன்னா நல்லா இருக்குமே!!!

    ReplyDelete