Wednesday, August 31, 2011

ஒரே பக்கத்தில் 500 இடுகைகளையும் பார்க்கலாம்



வலைப்பூக்களின் உலகம் நாளுக்கு நாள் தன் எல்லையை விரிவாக்கி கொண்டே இருக்கின்றன . பல புது பதிவர்கள் மற்றும் திறமையுள்ள பதிவர்களும் உருவாகி கொண்டே இருக்கின்றன .தமிழ் பதிவுலம் சூடான இடுகைகளுடன் தன் வாசகர்களை அனுதினமும் சந்தித்து தங்கள் நல்ல கருத்துகளை சொல்லி வருகின்றன .
சில வலை பதிவுகளில் ஐந்நூறு க்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதியிருப்பார்கள் அவர்களின் ஆரம்ப கால பதிவுகளை படிக்க முடியாமல் வாசகர்கள் திணறுவார்கள் . ஒருவர் ஐந்நூறுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதி இருப்பார்கள் .அதை நாம் எப்படி படிப்பது என்று பார்போம் .
நாம் எந்த ஒரு தளத்தின் உள்ளே ( முகப்பு பக்கத்தில் ) சென்றவுடன் குறிப்பிட்ட இடுகைகள் இருக்கும் (5,6,7,3,4).அந்த இடுகைகளின் முடிவில் பழைய இடுகைகள் அல்லது OLDER POST என்று இருக்கும் .  அந்த லிங்கை பார்த்தீர்கள் என்றால் கீழ் கண்டவாறு இருக்கும் .

http://www.example.com/search?updated-max=2011-08-31T23:15:00+05:30&max-results=100

100 என்ற இடத்தில் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் போட்டு கொள்ளலாம் . பதிவர் 800 இடுகை எழுதி இருந்தால் முதலில் 500 ம்  பின்  300 இடுகைகளும் காட்சி அளிக்கும் .
முதலில் domain இருக்கும் பிறகு MAX= தேதி (அதாவது ஒவ்வொரு பக்கத்திலும் அந்த வலை பதிவர் ஆறு அல்லது ஐந்து இடுகைகளை படிக்கலாம் என அமைப்பை(SETTINGS) அமைத்திருந்தால் அப்படி தெரியும் ).அதன் பிறகு நேரம் அந்த நேரம் முடிய எழுதிய இடுகைகளை காண்பிக்கும் .

உதாரணதிற்கு ஒரு தளத்தை எடுத்து கொள்ளுங்கள் . அந்த தளத்தில் எழுபது
இடுகைகள் இருக்கும் என வைத்துக் கொள்வோம் . ஆனால் உங்களுக்கு எழுபது இடுகைகள் இருக்கிறது என்று தெரிய வில்லை . நீங்கள் செய்ய வேண்டியது . மேலே உள்ள பார்மேட்டின் படி URL இன் இறுதியில் 100 என்று கொடுத்து ADDRESS பாரில் PASTE & GO செய்து விட்டால் முதலில் ஐம்பது இடுகைகளும் பின்னர் இருபது இடுகைகளும் வரும் .120 இடுகைகள் இருந்தால் முதலில் 100 ம் பிறகு 20 இடுகைகளும் காட்சி அளிக்கும் .ஒரே பக்கத்தில் எத்தனை இடுகைகளை வேண்டுமானா லும் பார்க்கலாம் .இது நாம் கொடுக்கும் MAX RESULTS ஐ பொறுத்து அமையும் .

கைபேசி  பயனர்களுக்கும் இதே போன்று தான் ஆனால் ஒன்று செய்ய வேண்டும்



http://www.example.com/search?updated-max=2011-08-31T23:15:00+05:30&max-results=100&m=1  

கொடுத்து விட்டால் அவ்வளவு தான் .

  




இதில் இன்று முக்கியம் அந்த பதிவர்அனைத்து இடுகையையும் பார்பதற்கு
UPDATED -MAX=(DATE ) அந்த இடத்தில் இன்றைய தேதியை போட்டு விட வேண்டும் . அப்போது தற்போது எழுதிய இடுகையில் இருந்து தெரியும் .

சில  பதிவர்கள் தங்கள் தங்கள் பல பக்கஉறுப்புகளை(GEDGET/ WIDGET/PAGE ELEMENT) கொடுத்திருப்பார்கள் . அது போன்ற பக்கங்களுக்கு செல்லவே உங்களுக்கு நேரம் பிடிக்கும் . இதற்கு ஒரே வழி உண்டு .  அந்தவலைப்பூவின் URL இன் இறுதியில் ?m=1 என்பதை மட்டும் கொடுத்து PASTE & GO செய்து விட்டால் MOBILE TEMPLTE தெரியும் .அதில் பேஜ் HEADER மற்றும் இடுகைகள் மட்டும் தான் தெரியும் அந்த இடுகைகளை எளிமையாக படித்து விட்டு கருத்துரை இட்டு செல்லலாம் .

(குறிப்பு : இது பிளாக்கர் தளங்களுக்கு மட்டும்)

நன்றி ........

8 comments:

  1. பயனுள்ள தொழில்நுட்பக்குறிப்பு

    ReplyDelete
  2. பயனுள்ள தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  3. ஒரு பயனுள்ள விடயத்தை அறியத்தந்திருக்கிறீர்கள். நன்றி

    ReplyDelete
  4. சூப்பர் பதிவு..!!ஒவ்வொரு பதிவையும் திறக்க வேண்டிய அவசியமில்லாமல் அனைத்தையும் ஒரே பக்கத்தில் பார்ப்பது சிறப்பு.பகிர்விற்கு நன்றி ஸ்டாலின்..!! :)

    ReplyDelete
  5. நண்பரே, நல்ல பதிவு, இது போன்று இன்னும் பல பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. பயனுள்ள பதிவு.

    //அண்ணன் பலே பிரபு வின் வலை தளம் ://

    அவ்வ்வ் நான் அண்ணனா? என்ன சகோ இப்புடி பண்ணிட்டீங்க? என் பெயருக்கு கீழ பெரிய அண்ணன் இருக்காரே.

    ReplyDelete
  7. தாமதமான பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்.

    நல்ல தகவல் நண்பா! என் ப்ளாக்கையும் பகிர்ந்ததற்கு நன்றி!

    நான் அண்ணன் இல்லை.. நண்பன்..

    :) :) :)

    ReplyDelete
  8. Thank you for such a well-written and interesting post. I'll surely add it to my Favorites. buy cialis

    ReplyDelete