Thursday, August 30, 2012

சிறந்த ஆன்லைன் டிக்சனரி

Definitions-Net-Find-Meaning-word

சொற்களின் பொருள்களை அறிவதற்கு நாம் பயன்படுத்துவது அகராதியை தான் . அகராதிகள் நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது . தினமும் நாம் கேள்விப் படும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் பொருள் அறிய அகராதியை நாட வேண்டி உள்ளது. அதிகமாக படிக்கும் காலங்களில் தான் அகராதியை பயன்படுத்துவோம் ஆனால் இன்றைய கால கட்டத்தில் தினமும் புது புது சொற்கள் வந்து கொண்டிருப்பதால் நாம் அகராதியை நாட வேண்டி உள்ளது .

Friday, August 24, 2012

ப்ளாக்கர் : வலைப்பூ / பதிவுக்கு பூட்டு போடுவது எப்படி


வலைப்பதிவு தொடங்கி அதில் தினமும் பதிவு எழுதும் நண்பர்களுக்கு அதை பேக் அப் எடுத்து சரியாக கொண்டு செல்வது சுலபம் தான் இருந்தாலும் ஹேக்கர்கள் சில வலைப்பதிவுகளை ஹேக் செய்து விடுவார்கள் . இதனால் கடவு சொல்லை உறுதியுடன் மாற்றி Google Verfication போன்ற பல வற்றை செய்வோம் . இன்று நாம் பார்க்க போவது வலைப் பூ -வுக்கு பூட்டு போடுவது எப்படி .

Wednesday, August 22, 2012

சுழன்று கொண்டே இருக்கும் படங்களை பதிவில் எப்படி இணைப்பது ?


நாம் பதிவு எழுதும் போதும் மற்ற தேவைகளுக்காகவும் ப்ளாக்-கில் படங்களை இணைப்போம் ... சாதாரணமாக HTML வைத்து இணைப்போம் பிளாக்கர் மற்றும் வோர்ட்பிரஸ் தளங்களில் படங்களை இணைக்க எளிதாக Tool ஒன்று உள்ளது .அதன் மூலம் படங்களை இணைத்திடலாம் .

Tuesday, August 21, 2012

You Tube - காணோளியை சிறு சிறு படங்களாக நொடியில் மாற்றலாம்

உலகின் மிகப்பெரிய வீடியோ பகிரும் தளம் You tube . You tube -ல் ஒரு நாளைக்கு பல காணொளிகள் பகிரப்படுகின்றன . அதிகமான tutorial வீடியோக்களும் You Tube-ல் உண்டு . Photo Shop , How To Use Gmail ,How To Strat blogger blog , how to Upload Blogger Template , How To buy Home Loan , How To Start Paypal Account , How To Signup Google Adsense , How To Start Internet Business என்று பல வகை தலைப்புகள் காணொளிகள் You Tube-ல் காணப் படுகின்றன . ஒரு முழு ஓவியத்தை எப்படி வரைய வேண்டும் என்பதில் இருந்து புது வகையான சமையல் பண்டங்களை எப்படி செய்து என்பதை நமக்கு கற்று தருகிறது You tube .

இப்படி பல வகையான காணொளிகள் நிரம்பிய You tube-ல் நாம் ஒரு வீடியோவை பார்த்து கொண்டு இருக்கும் போது , அந்த வீடியோ-வில் என்ன காட்சிகள் வரும் என்பதை 4-படங்களில் இருந்து காட்டும் . இதற்கு தேவை ஒரு சின்ன புக் மார்க் ..

இந்த புக் மார்க்-ஐ இழுத்து புக் மார்க் பாரில் விடவும் ..

புக் மார்க்-ஐ கொண்டு வர கீழே உள்ள படத்தை காணவும் ..

Fire Fox - ல் View - Toolbar - Bookmarks ToolBar - ல் டிக் செய்யவும் .

Chrome - ல் click " Settings Icon " - bookmars -Show Book marks bar -டிக் செய்யவும் .


இந்த படத்தில் தெரிவது போல் புக் மார்க்-ஐ கொண்டு வந்து You Tube Frames என்பதை You tube 
மேலே உள்ள படத்தை போன்று You Tube வீடியோ பார்ப்பதற்கு முன்னே புக் மார்க் பாரில் உள்ள இந்த You Frames என்பதை கிளிக் செய்தால் பல சின்ன சின்ன படங்களாக மாற்றி தரும் . கீழே உள்ள புக் மார்க்-ஐ இழுத்து விடவும் .


YouTube Frames

Thursday, August 9, 2012

அட்டகாசமான சமையல் பதிவுகளை ஒரே இடத்தில பார்க்க / பகிர


நண்பர்களே வணக்கம் . சமையல்வகைகளில் நாளுக்குநாள் பல விதமான உணவு வகைகள் வந்து கொண்டே தான் சமையல் பதிவுகளை பகிரும் வலைப்பூக்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல உள்ளன . பல சமையல் பதிவுகள் அனைத்தையும் பகிரும் ஒரு அற்புதமான இணையதளம் ஒன்று உள்ளது . இந்த தளத்திற்கு சென்றாலே நாவில் எச்சில் வரும் . அந்த அளவிற்கு விதவிதமான கேக் வகைகள் போன்ற அனைத்தும் காணப்படுகிறது. சமையல் பிரியர்களுக்கும் , புதியதாக ஏதாவது சமைக்க வேண்டும் என்பவர்களுக்கு நிச்சயம் இந்த தளம் கைகொடுக்கும் . இந்த இணையதளம் பார்த்தவர்கள் நொடியில் திரும்ப மாட்டார்கள் . அந்த அளவிற்கு பலவகையான உணவு பதார்த்தங்கள் உள்ளன . சமீபத்தில் மிகவும் பிரபலமான தளமான Pinterest போன்றே தோற்றத்தை பெற்றுள்ளது இந்த நீங்கள் ஆங்கிலத்தில் சமையல் வலைப்பூ வைத்திருந்தால் உங்கள் பதிவுகளை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

Wednesday, August 8, 2012

தொட்டால் விவரிக்கும் இணைப்புகள் (Tool Tip)

வணக்கம் நண்பர்களே தொட்டால் விவரிக்கும் இணைப்புகளை பார்த்தோம் . அந்த வரிசையில் இன்று பார்க்க இருப்பது .... எச்சரிக்கை , உதவி , தகவல்கள் ,பாதிக்கப்பட்டுள்ளது என சிலவார்தைகளை தொட்டால் அதன் விளக்கங்களை காட்டும் Tooltip Box எப்படி உருவாக்கலாம் என்பதை பார்க்க போகிறோம் .

Monday, August 6, 2012

பதிவு எழுதி பணம் சம்பாதிக்க இரண்டு தளங்கள்


நல்ல எழுத்தாளர்கள் மற்றும் பதிவர்களின் தேவை இணையத்தில் அதிகமாக உள்ளது . பிளாக்கர் / வோர்ட்பிரஸ் போன்றவற்றில் பல வலைப்பூக்கள் இருதாலும் நல்ல பதிவுகள் கொஞ்சமாக தான் இருக்கிறது .பல பதிவர்கள் ஏற்கனவே பகிர்ந்ததை  தான் பதிவிடுகிறார்கள் மேலும் சிறந்த மற்றும் தனித்த பதிவுகளை பலரும் பகிருவதில்லை .சிலர் தங்களுக்கு என்று வலைப்பதிவு கூட இல்லாமல் பெரிய தளங்களில் விருந்தினர் பதிவு எழுதி பணம் ஈட்டுகின்றனர் . 

Wednesday, August 1, 2012

பிளாக்கர் : பக்கங்களில் விட்ஜெட்-கள் அனைத்தையும் மறைப்பது எப்படி ?

பிளாக்கர் தளம் ப்ளாக் வரலாற்றில் எட்ட முடியாத உயரங்களை தொட்டு நாளுக்கு நாள் பல பயனர்களுடன் சென்று கொண்டிருக்கிறது . மேலும் தினமும் மேம்பட்ட வசதிகளுடன் வாசகர்களுக்கு கொடுத்து வருகிறது . பிளாக்கர் தளத்தில் பக்கங்கள் உருவாக்குவது பலரும் அறிந்ததே . பக்கங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுகள் தான் உருவாக்க முடியும் . மேலும் பக்கங்களில் பதிவுகளை எழுதுவதால் நமக்கு எந்த பயனும் இல்லை . மேலும் மின்னஞ்சலில் ஒரு நண்பர் "வேறு பக்கங்களில்(Not Home page) பதிவுகளை காண்பிக்க முடியுமா என்று கேட்டார் " அப்படி காண்பிக்க முடியாது .

மேலும் முகப்பு பக்கத்தில் பதிவுகள் வந்தால் தான் Feed அதை எடுத்து கொண்டு திரட்டி-கள் Google Reader மற்றும் Feed -மூலம் படிக்கும் வாசகர்களிடம் போய் சேரும் . இது இணையதளமாகவும் வோர்ட் பிரஸ் -மற்றும் எதுவாக இருந்தாலும் பொருந்தும் .

சரி விசயத்துக்கு வருவோம் . நாம் பிளாக்கர் தளத்தில் உருவாக்கும் பக்கங்கள் பகுதியும் விட்ஜெட்-களுடன் காணப்படும் . இந்த விட்ஜெட்-களை எல்லாம் மறைத்து விட்டால் இணையதளம் போன்று காணப்படும் .

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு சின்ன நிரலை <body> -என்பதை தேடி அதற்கு கீழே Paste செய்ய வேண்டியது தான் .

<b:if cond='data:blog.pageType == &quot;static_page&quot;'>
<style>
.blog-pager, .footer, .post-footer, .feed-links, .sidebar { display:none !important;}
#main-wrapper {width: 95%; float:none; margin: 0 auto !important;}
</style>
</b:if>
 உதாரணத்திற்கு இந்த பக்கத்தை பார்க்கவும்  .

சந்தேகம் இருந்தால் கேட்கவும் .நன்றி