Tuesday, December 13, 2011

உங்கள் தளத்திற்கு பட்டன்கள் எளிதில் உருவாக்க





வலைப்பூவைத்திருக்கும் அனைவருக்கும் அவர்கள் ப்ளாக்கிற்கு தேவையானது அவர்கள் தளத்தை அடையாளப்படுத்தும் விதம் தான் இந்த பட்டன்கள் மற்றவர்கள் உங்கள் தளத்தை இணைத்துக்கொள்ள இந்த பட்டங்கள் மிகவும் பயனுள்ள விதமாக இருக்கும் . நாம் உருவாக்கும் பட்டன்-களை விட இந்த பட்டன் சிறியதாகவும் ,தெளிவாக புரியும் படியும் இருப்பது கூடுதல் சிறப்பம்சம் . 

மூன்று  தளங்களை தருகிறேன் . . .

உங்களுக்கு  எந்த நிறம் ,எந்த அளவில் வேண்டுமோ அதற்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்ளுங்கள் .





  Logo-Design-Pixel-Badge!



நன்றி ....

Friday, December 9, 2011

இணையத்தில் நேரத்தை சேமிக்க ஐந்து சிறந்த வழிகள்



இணையத்தில் பல மணி நேரம் நாம் இருந்தாலும் அந்த நேரங்கள் உண்மையில் மிகவும் பயனுள்ளவிதமாகத்தான் இருக்கிறதா ..



எப்படி நேரத்தை மிச்சப்படுத்தி பயனுள்ள விதத்தில் நாம் நம் இணைய நேரத்தை மாற்றலாம் .

1.சிறந்த உலாவியில் இணையத்தை பயன்படுத்துங்கள் : 


நாம்  பயன்படுத்தும் உலாவிகளில் எனக்கு பிடித்தது பயர்பாக்ஸ் தான் நல்ல வேகமும் , அதிக திறனையும் கொண்டு நன்கு இயங்ககூடியது . சில ஜாவா ஸ்கிரிப்ட் - குரோம் உலாவில் கூட ஒழுங்காக காட்டப் படாது .

புக் மார்க் செய்வதற்கு நெருப்புநரி உலாவி தான் சிறந்தது .மேலும் இணையஇணைப்புக்கு தகுந்தவாறு தன்னை மாற்றி கொள்ளும் ஒரு உலாவி .
மொபைலில் இருந்து கணிணி-க்கு கொடுக்கும் இணைய இணைப்பின் வேகம் 50-60 KBPS தான் இருக்கும் .ஒரே நேரத்தில் பல டேப்களை திறந்து கொள்ளலாம் .டேப்பும் அதன் தலைப்பும் தெளிவாக தெரியும் . அனால் க்ரோமில் இது அப்படி தெரியாது .



அந்த இணைய இணைப்பில் தெளிவாக இணையப் பக்கங்களை வரிசைப்படுத்துகிறது . மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீட்சிகள் குவிந்து கிடக்கிறது. க்ரோமும் அதிவேகமும் ,நல்ல திறனுடன் இயங்க கூடிய உலாவி 
இப்போது க்ரோமிலும் ஆயிரக்கணக்கான நீட்சிகள் காணப்படுகிறது . 

ஒபேரா ஒரு நல்ல உலாவி .இதிலும் புக் மார்க் ,OPERA TURBO என்னும் சிறப்பு வசதி இதில் உள்ளது .இது வேகம் குறைவான இணைப்பில் சரி செய்து , இணைய தகவல் பரிமாற்றத்தின் அளவை குறைக்கிறது . 
எந்த உலாவியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சரியாக தேர்ந்தெடுங்கள் .



2.மிகச்சிறந்த நீட்சிகளையும் பயனுள்ள பக்க உறுப்புகளையும் நிறுவுங்கள் : (Add useful Extensions/Plug-ins/Add-ons)


நல்ல உபயோகமுள்ள நீட்சிகளை உலாவிகளில்நிறுவினால் எளிதாக சில வேலைகளை முடிக்கலாம் .  சிறந்த உலாவிகளின்நீட்சிக்கான பக்கங்கள் கீழே :

FirefoxGoogle Chrome and Safari 

3.உலாவிகளின் சுருக்கு விசைகளை தெரிந்து கொள்ளுங்கள் :


உலாவிகளின்  வேகமாக உலாவ முக்கியமானவை ,இந்த குறுக்கு விசைகள் நாம் நேரமும் சேமிக்கப் படும் . உலாவிகளின் அனைத்து சுருக்கு விசைகளின்

பக்கங்களுக்கான சுட்டிகள் கீழே :

Firefox , Chrome , Internet Explorer, and  Apple Safari .


 4.உலாவியின் முதல் பக்கம் வெறும் பக்கமாக மாற்றுங்கள் : 


சில உலாவியில் திறந்த உடனேயே சில தளங்கள் அல்லது ஓறிரு தளங்கள் திறக்கப்படும் .இதனால் உங்கள் உலாவியின் வேகம் பாதிக்கப்படக்கூடும்  பாதிக்கப்படும் .இதனை அமைப்பதற்கு 


TOOLS - OPTIONS - CLICK GENTRAL TAB - WHEN FIREFOX STATUS - SHOW BLANK PAGES 




5. கடவுச்சொற்களைப் பாதுகாத்து வையுங்கள்  :

இணைய த்தில் முக்கியமே இதுதான் தற்போது பெருகிவரும் ஹக்கர்களிடம் இருந்து உங்கள் கடவுச்சொல்லை பாதுகாக்க PASSWORD MANEGER போன்ற மென்பொருள்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள் . உங்கள் உலாவியில் சேமித்து வைத்தால் எளிதில் ஹாக் செய்யப்பட வாய்ப்பு உள்ளது . பல தளங்களுக்கு சென்று பதிவு செய்து உறுப்பினர் ஆக இருந்தால் கீழே உள்ள மென்பொருளை பயன்படுத்தவும் .


KeePass Password Safe

Wednesday, December 7, 2011

பேஸ் புக் மின்னஞ்சல் வேண்டுமா @ facebook.com



சில வருடங்களுக்கு முன் தொலைவில் உள்ள நம் உறவினர்கள் ,நண்பர்கள் பலகினவர்கள் ஆகியோரிடம் தொடர்பு கொள்ள கடிதங்களை தான் பயன்படுத்துவோம் . காலம் செல்ல செல்ல கடிதம் போக்குவரத்து குறைந்தது. தான் பின் தொலைபேசிகள் ,பிறகு கையடக்க கைபேசிகள் என்று ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அறிவியல் தன் எல்லை விரித்துக் கொண்டது . 

நாடு விட்டு நாடு இருப்பவர்களுக்கு மின்னஞ்சல் , பிறகு அரட்டை , நேரடி காணொளி அரட்டை என்று அதன் அகலம் பெரிதாகி கொண்டே சென்றது ..செல்கிறது ...இன்னும் என்னவெல்லாம் தொழில்நுட்ப உலகில் நடக்க போகிறதோ தெரியவில்லை .

சரி மேட்டருக்கு வருவோம் ..முக நூல் அதாங்க பேஸ் புக் மின்னஞ்சல் உருவாக்கலாம் எப்படி -ன்னு பாக்குறீங்களா சொல்லறேன் ... 

பேஸ் புக் இதுவரைக்கும் நீங்கள் நண்பர்களோடு இணையவும் , கருத்துகளை தெரிவிக்கவும் தான் யூஸ் பண்ணிர்பிங்க இனி பேஸ் புக் -ல மெயில் ஐடி ஒபன் பண்ணி அத உங்க நண்பர்கள் கிட்ட பகிர்ந்து கொள்ளுங்கள் . 

முதல்ல இந்த கீழே இருக்கு பாருங்க அத கிளிக்-குங்க 


அடுத்து  Go To Messages  aஅப்ப்டிங்குறத கிளிக் பண்ணுங்க 

http://www.facebook.com/messages/  இந்த பக்கத்துக்கு போகும் .

மேல மூணு ஆப்சன் இருக்கும் . அது-ல முதல்   ஆப்சன கிளிக் பண்ணுனா உங்களுக்கு பேஸ் புக் மின்னஞ்சல் ரெடியாயிரும் . 

 உங்க பேஸ் புக் பயனர் பெயர் www.facebook.com/eppudi   இப்படி இருந்துசுனா 

eppudi@facebook.com-ன்னு மாறிடும் . இனி இந்த மின்னஞ்சல உங்கள் நண்பர்களுக்கு சொல்லி ஒரு மின்னஞ்சல் (gmail,hot mail,yahoo mail to face book )அனுப்ப சொல்லுங்க ...


அந்த செய்தி உங்கள் பேஸ்புக் பக்கத்துல வந்து இருக்கும்
உங்கள் மின்னஞ்சலை நிலையை அறிய இந்த பக்கத்துக்கு செல்லுங்கள் .

facebook.com/about/messages/


 கவனிக்க : பயனர் பெயரில் இல்லை என்றால் இந்த இடுகையை படித்து பயனர்பெயருக்கு மாற்றவும் .



 பேஸ் புக் யூசர் ஐடியில் இருந்து பயனர் பெயராக எப்படி மாற்றுவது 

நன்றி ...

உங்கள் மேலான கருத்துக்கள் தெரிவிக்கவும் ; 

Tuesday, December 6, 2011

புதிய மின்னஞ்சல்கள் வந்ததா என்று எஸ்.எம்.எஸ் -ஸில் அறிய



தினமும் நாம் மின்னஞ்சல் பார்ப்பதற்கு நேரம் நமக்கு கிடைக்காது  . அது போன்ற நேரங்களில் நமக்கு முக்கியமான மின்னஞ்சல்கள் வந்ததா என்று நாம் எப்படி அறிந்து கொள்ளலாம் . அதற்கு தான் இந்த தளம்நமக்கு உதவுகிறது .இது ஒரு அருமையான தளம் . நமக்கு வரும் புதுபுது மின்னஞ்சல்களை நமக்கு உடனடியாக தெரியப் படுத்துகிறது . இந்தியாவில் உள்ள அனைத்து நெட்வொர்க்களுக்கும் இது நன்றாக செயல் படுகிறது .